2302 - (ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: (مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ: وَاللاَّتِ وَالعُزَّى؛ فَلْيَقُلْ: لاَ إِلهَ إِلاَّ اللهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقامِرْكَ؛ فَلْيَتَصَدَّقْ) .
அபூ ஹூரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள். ஒருவர் சத்தியம் செய்யும் போது 'லாத் உஸ்ஸாவின் மீது சத்தியமாக' என்று கூறினால் அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று கூறட்டும். ஒருவர் தன் தோழரிடம் வா உன்னுடன் சூதாட்டம் விளையாடுகிறேன், என்று கூறினால் அவர் (இப்படிக் கூறியதற்காக) தானதர்மம் செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
[خ4860/ م1647]