85 - عَن ابْنِ عَبَّاسٍ قَالَ: كُنْتُ خَلْفَ رَسُولِ اللهِ صلّى الله عليه وسلّم يَوْماً فَقَالَ: (يَا غُلاَمُ، إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللهَ يَحْفَظْكَ، احْفَظِ اللهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَألْتَ فَاسْأَلِ اللهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللهِ، وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ عَلَيْكَ، رُفِعَتِ الْأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ) .
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன. பிறிதொரு நபிமொழித் தொகுப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உன் முன் கண்டுகொள்வாய். நீ செழிப்பாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைவு கூறு. கஷ்டத்தின் போது அவன் உன்னை நினைவுகூர்வான். அறிந்து கொள்: உனக்குக் கிட்டாமல் சென்றவைகள் உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்குக் கிட்டியவைகள் உன்னைக் கடந்து சென்று விடும்படி விதிக்கப்படவில்லை. பொறுமையுடன்தான் வெற்றியுண்டு. துன்பத்துடன்தான் விடிவுண்டு. கஷ்டத்துடனே தான் இலகுமுண்டு என்பதை அறிந்து கொள்.
قال تعالى: {وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ}. [الحديد:4]
[ت2516]