நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள் : "ஒரு முஸ்லிமுக்கு அவனைத் தைத்து விட்ட ஒரு முல்லு உட்பட, அவனுக்கு ஏற்படும் சிரமம், நோய், கவலை, துக்கம்,வேதனைகளை அல்லாஹ் அவனின் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக ஆக்காமல் இருக்கமாட்டான்".
நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) கூறுகின்றார்கள் : "அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்".
ரஸூல் (ஸல்) தங்களின் மனைவியரில் ஒருவரிடம் நோய் விசாரிக்கச் சென்றிருந்த போது "மனிதர்களின் இரட்சகனே! நீயே சுகமளிப்பவன்,ஆகையால் நீ தொல்லைகளை அகற்றி சுகத்தை அளித்திடுவாயாக.மேலும் நீ தரும் சுகத்தையன்றி நோய் தங்கி இருக்காதபடி சுகம் தரும்படியான வேறு நிவாரணம் எதுவுமில்லை".என்று கூறியவாறு தங்களின் வலது கையால் தடவினார்கள்.என்று ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.