அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனை தண்டிப்பதில் அவகாசம் வழங்குகிறான்.அவனை தண்டித்தால் அவனை விடவும் மாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஒதினார்கள் :.“மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும் நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்" எனும் வசனத்தை ஓதினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள் : “நீர் வேதக்காரர் உள்ள சமூகத்திடம் செல்கின்றீர். நீர் முதலில் அழைப்பது 'உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' எனும் சாட்சியமாக இருக்கட்டும், - மற்றுமோர் அறிவிப்பில் 'அவர்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதன் பால் அழைப்பதாக இருக்கட்டும்' என இடம்பெற்றுள்ளது- , அதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அல்லாஹ் அவர்களுக்கு தினமும் ஐவேளைத் தொழுகைகளை அவர்களுக்கு விதியாக்கியுள்ளான் என்பதை அறிவியுங்கள். அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக செல்வத்தில் அல்லாஹ் ஸகாதை கடமையாக்கியுள்ளான் என்பதை அறிவியுங்கள். அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்த வற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.” என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸிர்மா (ரலி) கூறுகின்றார்கள் : ''எவன் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் கஷ்டத்தில் ஆழ்த்துவான்''.