தன் எஜமைானனுக்கு நல்லுபதேசம் செய்தும்,நல்ல முறையில் அல்லாஹ்வை வணங்கியும் வந்த அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு,என்று ரஸூல் (ஸல) அர்கள் கூறினார்கள்,என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.மேலும் தன் இரட்சகனின் வழிபாடுகளை நல்லமுறையில் மேற்கொண்டும்,தன் எஜமானனுக்குச் செய்யும் கடமைகளை நிறைவேற்றியும் அவருக்கு நல்லுபதேசம் செய்தும்,அவருக்கு வழிப்பட்டும் வந்த அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டென ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினர்கள், எனஅபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றர்கள்.